பாடகர்கள் : சாய் ஸ்மிருதி மற்றும் அனிருத் ரவிச்சந்தர்
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர் : விஷ்ணு எடவன்
பெண் : கலங்காதே கண்ணே என்பாயே
என் உயிரின் ஆதி
இன்றேனோ மௌனம் கொண்டாயே
என் பெயரின் பாதி
பெண் : இனி உன்னை பார்க்க முடியாதா?
உன் மார்பில் சாய முடியாதா?
பெண் : உரையாடல்
பெண் : என் மீசை அன்னையே நீ பிரியாதே
என் ஆயுள் காதலே நீ பிரியாதே
உயிர்நாடி நண்பனே நீ பிரியாதே
உயிர்நாடி நண்பனே நீ பிரியாதே
உரையாடல் : …………………….
ஆண் : நண்பன்டா
ஹம்மிங் : …………..
பெண் : எல்லா உயிரும் பிரியுமே
அறிவும் ஏற்று கொண்டது
ஆனால் இதயம் உன்னையே
கேட்டு காயம் ஆகுது
பெண் : மீண்டும் உன் குரலோ என் பெயர் கூற
ஆசை தீரதோ?
ஓர் நாள் ஓர் நொடியோ உன் நிழல்
என்னை அணையாதோ?
பெண் : என் மீசை அன்னையே நீ பிரியாதே
என் ஆயுள் காதலே நீ பிரியாதே
உயிர்நாடி நண்பனே நீ பிரியாதே
உயிர்நாடி நண்பனே நீ பிரியாதே
உயிர்நாடி நண்பனே நீ பிரியாதே
ஆண் : …………………..