பாடல்: விநாயகனே வினை தீர்ப்பவனே
பாடலாசிரியர்: டாக்டர் உளுந்தூர்பேட்டை சண்முகம்
பாடகர்(கள்): சீர்காழி எஸ். கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: டி.பி. ராமச்சந்திரன்
ஆல்பம்: விநாயகர் பாடல்கள்
ஆண் : விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
விநாயகனே வேட்கை தணிவிப்பான்…
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்…
தன்மையினால் கண்ணிற் பணிவில் கணிந்து…
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
ஆண் : விநாயகனே வினை தீர்ப்பவனே…
விநாயகனே வினை தீர்ப்பவனே…
வேழ முகத்தோனே ஞால முதல்வனே…
விநாயகனே வினை தீர்ப்பவனே…
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
ஆண் : குணாநிதியே குருவே சரணம்…ஆ…
குணாநிதியே குருவே சரணம்…
குறைகள் களைய இதுவே தருணம்…
குறைகள் களைய இதுவே தருணம்…
ஆண் : விநாயகனே வினை தீர்ப்பவனே…
வேழ முகத்தோனே ஞால முதல்வனே…
விநாயகனே வினை தீர்ப்பவனே…
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
ஆண் : உமாபதியே உலகம் என்றாய்…
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்…
உமாபதியே உலகம் என்றாய்…
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்…
ஆண் : கணநாதனே மாங்கனியை உண்டாய்…ஆ…
கணநாதனே மாங்கனியை உண்டாய்…
கதிர்வேலவனின் கருத்தில் நின்றாய்…
கதிர்வேலவனின் கருத்தில் நின்றாய்…
ஆண் : விநாயகனே வினை தீர்ப்பவனே…
வேழ முகத்தோனே ஞால முதல்வனே…
விநாயகனே வினை தீர்ப்பவனே…