பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா, சத்ய பிரகாஷ் மற்றும் கௌஷிக் கிரிஷ்
இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா
பாடல் ஆசிரியர் : ஹிப்ஹாப் தமிழா
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
ஆண் : கலைவாணியே நீ கலங்காதடி
கடல் தாண்டியும் உனக்காய் வருவேனடி
கலைவாணியே நீ கலங்காதடி
கடல் தாண்டியும் உனக்காய் வருவேனடி
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
ஆண் : கண் அசச்சா போதுமே
கைப் புடிக்கத் தோணுமே
கைப் புடிச்சா போதுமே
உயிர் வர அதுப் பாயுமே..ஆஆ
ஆண் : நீ சிரிச்சா போதுமே
அத ரசிக்கத் தோணுமே
அத ரசிக்க எனக்குத்தான்
நூறு வருஷம் வேணுமே..ஹோ ஓ ஓ ஓ….
ஆண் : உன்ன அலுங்காம குலுங்காம
அடி நெஞ்சில் சுமப்பேனே
அட மழையில நனையாம
அடைக்காத்து கிடப்பேனே…
ஆண் : அடியே என் செல்லம்
உனக்கே என் உள்ளம்
உன் ஓரக்கண் பார்வைக்கு
அது ஒரு வரம் துள்ளும்…
ஆண் : கலைவாணியே நீ கலங்காதடி
கடல் தாண்டியும் உனக்காய் வருவேனடி
கலைவாணியே நீ கலங்காதடி
கடல் தாண்டியும் உனக்காய் வருவேனடி
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
ஆண் : நீ நம்பிக்கை தந்தாடி உலகத்த பந்தாடி
உன் கூட கொண்டாடத் தோணுதடி
நீ ஒரு வார்த்தை சொன்னாலே மறு வார்த்தை இல்லாம
அத வாக்கா எண்ணித்தான் வாழுவேன்டி…
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
ஆண் : என் மண்ணே நீ உன் மரமா நான்
என் மலரே நீ உன் உரமா நான்
என் கனவே நீ உன் நிஜமா நான்
என் உயிரே நீ உன் உறவா நான்..ஆஆ…..
ஆண் : நமக்குன்னு தனியா ஒரு தேசம்
அதில் உனக்குன்னு நான் காட்டும் தனி பாசம்
உன் நேசம் ஒளி வீசும் பூ வாசம்
என் பிள்ளைகள் உன் போல தான் பேசும்
ஆண் : ஒரு சிலை போல நீ இருக்க
மடிமேல நான் படுக்க
சில்லறையா நீ சிரிக்க
கஷ்டத்த நான் மறக்க..ஆஆஹ்
ஆண் : கலைவாணியே ஏ ஏ…
கலைவாணியே ஏ ஏ…
ஆண் : கலைவாணியே நீ கலங்காதடி
கடல் தாண்டியும் உனக்காய் வருவேனடி
கலைவாணியே நீ கலங்காதடி
கடல் தாண்டியும் உனக்காய் வருவேனடி
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
ஆண் : கலைவாணியே நீ கலங்காதடி