பாடல்: ஒன்பது கோளும்

பாடலாசிரியர்: உறுதிப்படுத்தப்படவில்லை

பாடகர்(கள்): டி. எல். மகாராஜன்

இசையமைப்பாளர்: உறுதிப்படுத்தப்படவில்லை

ஆல்பம்: விநாயகர் பாடல்கள்

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

ஆண் : அண்டம் முழுதும் ஒன்றினுள் அடக்கம்…
அதுவே ஆனை முகம் எனும் ஓம்கார விளக்கம்…
சுழலும் கோள்கள் அவன் சொல் கேட்கும்…
அவனை தொழுதால் போதும் நல்லதே நடக்கும்…
ஆனை முகனை தொழுதால் நவகிரகங்களும் மகிழும்…
நல்லதே நடக்கும்… நல்லதே நடக்கும்…

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

ஆண் : ஒன்பது கோளும் ஒன்றாய் காண…
குழு : பிள்ளையார் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…
குழு : உறையும் அவரை தொழ வேண்டும்…

ஆண் : ஒன்பது கோளும் ஒன்றாய் காண…
குழு : பிள்ளையார் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…
குழு : உறையும் அவரை தொழ வேண்டும்…

ஆண் : சூரியன் முதலாய் ஒன்பது கிரகமும்…
பல வித குணங்களை கொண்டிருக்கும்…
எங்கள் கற்பக கருவில் அவை வரும் போது…
ஒன்றாய் சேர்ந்து பலன் அளிக்கும்…

குழு : நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…
நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…

ஆண் : ஒன்பது கோளும் ஒன்றாய் காண…
குழு : பிள்ளையார் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…
குழு : உறையும் அவரை தொழ வேண்டும்…

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

ஆண் : சூரிய பகவான் ஒளி முகம் காண…
குழு : பிள்ளையார் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பக கருவின் நெற்றியில் மலரும்…
குழு : கதிரவன் தரிசனம் பெற வேண்டும்…

ஆண் : சூரிய பகவான் ஒளி முகம் காண…
குழு : பிள்ளையார் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பக கருவின் நெற்றியில் மலரும்…
குழு : கதிரவன் தரிசனம் பெற வேண்டும்…

ஆண் : இருளை விலக்கி உலகை எழுப்பும்…
ஞாயிறு அங்கே குடியிருப்பான்…
அவன் ஆனை முகத்தனின் அடியவர் மனதில்…
ஒளியாய் வந்து குடியிருப்பான்…

குழு : நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…
நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…

ஆண் : ஒன்பது கோளும் ஒன்றாய் காண…
குழு : பிள்ளையார் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…
குழு : உறையும் அவரை தொழ வேண்டும்…

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

ஆண் : திங்கள் பகவான் திரு முகம் காண…
குழு : பிள்ளையார் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பக பெருமான் தொப்புள் குழியில்…
குழு : குளிரும் அவனை தொழ வேண்டும்…

ஆண் : திங்கள் பகவான் திரு முகம் காண…
குழு : பிள்ளையார் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பக பெருமான் தொப்புள் குழியில்…
குழு : குளிரும் அவனை தொழ வேண்டும்…

ஆண் : பார்கடல் பிறந்த சந்திர பகவான்…
கணபதி வயிற்றில் பிறந்திருப்பான்…
எங்கள் கற்பகத்தானை கண்டவர் தமக்கு…
தீரா பிணிகளை தீர்த்து வைப்பான்…

குழு : நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…
நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…

ஆண் : ஒன்பது கோளும் ஒன்றாய் காண…
குழு : பிள்ளையார் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…
குழு : உறையும் அவரை தொழ வேண்டும்…

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

ஆண் : அங்காரகனவன் தங்கும் இடமே…
குழு : கணபதியாரின் வலத் தொடையே…
ஆண் : அவன் பொங்கும் முகத்தை காணுதல் வேண்டின்…
குழு : வணங்கிட வேண்டும் கணபதியை…

ஆண் : அங்காரகனவன் தங்கும் இடமே…
குழு : கணபதியாரின் வலத் தொடையே…
ஆண் : அவன் பொங்கும் முகத்தை காணுதல் வேண்டின்…
குழு : வணங்கிட வேண்டும் கணபதியை…

ஆண் : நெருப்பாய் எரியும் செவ்வாய் பகவான்…
மழையாய் மாறி பொழிந்திடுவான்…
அவன் பிள்ளையார் பட்டி வணங்கிடும் மாந்தர்…
மனதுக்கு உறுதியை கொடுத்திடுவான்…

குழு : நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…
நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…

ஆண் : ஒன்பது கோளும் ஒன்றாய் காண…
குழு :பிள்ளையார் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…
குழு : உறையும் அவரை தொழ வேண்டும்…

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

ஆண் : புத பகவானின் பத மலர் இரண்டும்…
குழு : பிள்ளையார் பட்டியில் தெரிகிறதே…
ஆண் : எங்கள் வலம்புரி நாயகன் வலக்கையின் கீழே…
குழு : புதனவன் தரிசனம் கிடைக்கிறதே…

ஆண் : புத பகவானின் பத மலர் இரண்டும்…
குழு : பிள்ளையார் பட்டியில் தெரிகிறதே…
ஆண் : எங்கள் வலம்புரி நாயகன் வலக்கையின் கீழே…
குழு : புதனவன் தரிசனம் கிடைக்கிறதே…

ஆண் : ஞான தேவியின் கணவன் புதனாம்…
ஞானம் நமக்கு கைக் கூடும்…
எங்கள் கற்பகத்தானின் வலக் கை காண…
வாக்கு வன்மையும் கை சேரும்…

குழு : நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…
நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…

ஆண் : ஒன்பது கோளும் ஒன்றாய் காண…
குழு : பிள்ளையார் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…
குழு : உறையும் அவரை தொழ வேண்டும்…

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

ஆண் : குருவின் தரிசனம் பெறுதல் வேண்டின்…
குழு : பிள்ளையார் பட்டி வர வேண்டும்…
ஆண் : நம் கற்பகப் பெருமான் உச்சந்தலையில்…
குழு : குடி வந்த குருவை தொழ வேண்டும்…

ஆண் : குருவின் தரிசனம் பெறுதல் வேண்டின்…
குழு : பிள்ளையார்  பட்டி வர வேண்டும்…
ஆண் : நம் கற்பகப் பெருமான் உச்சந்தலையில்…
குழு : குடி வந்த குருவை தொழ வேண்டும்…

ஆண் : ஆலமர் செல்வன் அவனது பார்வை…
தடைகளை நீக்கி வளம் பெருக்கும்…
நம் கணபதி சிரத்தை காண்கிற மங்கையர்…
மாங்கல்ய பலமே திடமாகும்…

குழு : நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…
நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…

ஆண் : ஒன்பது கோளும் ஒன்றாய் காண…
குழு : பிள்ளையார் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…
குழு : உறையும் அவரை தொழ வேண்டும்…

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

ஆண் : சுக்கிரன் பார்வை படுதல் வேண்டின்…
குழு : பிள்ளையார் பட்டி வர வேண்டும்…
ஆண் : எங்கள் இறைவன் கணபதி இடக் கையின் கீழே…
குழு : இருக்கும் அவனை தொழ வேண்டும்…

ஆண் : சுக்கிரன் பார்வை படுதல் வேண்டின்…
குழு : பிள்ளையார் பட்டி வர வேண்டும்…
ஆண் : எங்கள் இறைவன் கணபதி இடக் கையின் கீழே…
குழு : இருக்கும் அவனை தொழ வேண்டும்…

ஆண் : புத்திர பாக்கியம் தருகிற பகவான்…
சுக்கிரன் அங்கே குடியிருப்பான்…
அவன் கற்பகக் கடவுளை கண்டவர் தமக்கு…
பொன் பொருள் அள்ளி கொடுத்திடுவான்…

குழு : நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…
நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…

ஆண் : ஒன்பது கோளும் ஒன்றாய் காண…
குழு : பிள்ளையார் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…
குழு : உறையும் அவரை தொழ வேண்டும்…

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

ஆண் : அட்டமச் சனியின் நட்டங்கள் தவிர்க்க…
குழு : பிள்ளையார் பட்டி வர வேண்டும்…
ஆண் : எங்கள் வலம்புரி நாதன் வலக் கை மேலே…
குழு : வாழும் அவனை தொழ வேண்டும்…

ஆண் : அட்டமச் சனியின் நட்டங்கள் தவிர்க்க…
குழு : பிள்ளையார் பட்டி வர வேண்டும்…
ஆண் : எங்கள் வலம்புரி நாதன் வலக் கை மேலே…
குழு : வாழும் அவனை தொழ வேண்டும்…

ஆண் : வாழ்ந்திட வைப்பதும் தாழ்ந்திட வைப்பதும்…
சனி பகவானின் செயலல்லவா…
அந்த கணபதி கரத்தை கண்டவர் தமக்கு…
சனியின் பார்வை நலமல்லவா…

குழு : நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…
நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…

ஆண் : ஒன்பது கோளும் ஒன்றாய் காண…
குழு : பிள்ளையார் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…
குழு : உறையும் அவரை தொழ வேண்டும்…

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

ஆண் : திருநாகேஸ்வரம் அறியா மாந்தர்…
குழு : பிள்ளையார் பட்டி வரலாமே…
ஆண் : எங்கள் கற்பக பகவான் இடக் கை மேலே…
குழு : இருக்கும் ராகுவை தொழலாமே…

ஆண் : திருநாகேஸ்வரம் அறியா மாந்தர்…
குழு : பிள்ளையார் பட்டி வரலாமே…
ஆண் : எங்கள் கற்பக பகவான் இடக் கை மேலே…
குழு : இருக்கும் ராகுவை தொழலாமே…

ஆண் : பிணிகளை தருகிற பகவான் அவனே…
மருத்துவம் செய்வான் தெரியாதா…
ராகுவின் பதத்தை கணபதி கை மேல்…
கண்டால் நன்மைகள் விளையாதா…

குழு : நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…
நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…

ஆண் : கேதுவின் தோஷம் போகுதல் வேண்டின்…
குழு : பிள்ளையார் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பக தேவனின் இடத் தொடை மேலே…
குழு : மலரும் கேதுவை தொழ வேண்டும்…

ஆண் : கேதுவின் தோஷம் போகுதல் வேண்டின்…
குழு : பிள்ளையார் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பக தேவனின் இடத் தொடை மேலே…
குழு : மலரும் கேதுவை தொழ வேண்டும்…

ஆண் : ஐந்து தலையோடு எழுந்த சுவக் கேது…
கணபதி தொடையில் கொலுவிருப்பான்…
அவன் தொடரும் பிணிகளை நடுங்கச் செய்வான்…
தொழுதால் தொல்லைகள் நீக்கிடுவான்…

குழு : நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…
நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…

ஆண் : ஒன்பது கோளும் ஒன்றாய் காண…
குழு : பிள்ளையார்பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…
குழு : உறையும் அவரை தொழ வேண்டும்…

குழு : நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…
நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…

குழு : நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…
நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…

WhatsApp Facebook Twitter