Pillayar Suzhi pottu seyaledhuvum thodangu Lyrics in Tamil

பாடல்: சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
பாடலாசிரியர் : உறுதிப்படுத்தப்படவில்லை
பாடகர்(கள்): சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: உறுதிப்படுத்தப்படவில்லை
ஆல்பம்: விநாயகர் பாடல்கள்
ஆண் : ஓரானைக்கன்றை உமையாள் திருமகனை…
போரானைக் கற்பகத்தைப் பேணினால்…
வாராத புத்தி வரும்… வித்தை வரும்…
உத்திர சம்பத்து வரும்…
சக்தி தரும்… சித்தி தரும்தான்…
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
ஆண் : சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து…
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து…
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
ஆண் : அழியாத பெருஞ்செல்வம் அவனே…
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே…
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே…
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
ஆண் : வழியின்றி வேலனவன் திகைத்தான்…
குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்…
வழியின்றி வேலனவன் திகைத்தான்…
குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்…
ஆண் : மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்…
மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்…
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்…
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்…
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
ஆண் : கேட்டதெல்லாம் கொடுக்க வரும் பிள்ளை…
அவன் கீர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை…
ஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும்…
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்…
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்…
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
ஆண் : தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும்…
வரும் துயர் யாவும் முன் நின்று தடுக்கும்…
அஞ்சேலென்றொரு பாதம் எடுக்கும்…
அவன் அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும்…
அவன் அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும்…
ஆண் : பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து…
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து…
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…
WhatsApp Facebook Twitter