பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் பூமி
இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் ஆசிரியர் : விக்னேஷ் சிவன்
ஆண் : பூக்கட்டும் உன் பாதம் சுற்றி
வண்ண வண்ண பூக்கள் மட்டும்
கேட்கட்டும் உன் காதில் காக்கை
குருவி குயில்கள் கிளிகள் கூட்டம்
சூழட்டும் காதல் சூழட்டும்
ஆண் : கூறட்டும் உன் குட்டி கதைகள்
மழலையில் குழந்தைகள்
ஊறட்டும் உனக்குள்ளே இயற்கையின் இயல்புகள்
தூறட்டும் காதல் ஊறட்டும்
ஆண் : சிறு உலகினில் உள்ள ஒவ்வொன்றையும்
ஒருங்கிணைத்திடு
ஊஞ்சலில் என் அருகில் கண்மூடிக்கொண்டு
நீ மெய் மறந்திடு
ஆண் : பறந்து போ நீ பறந்து போ
உனக்கென்று கொஞ்ச நேரம் பறந்து போ
பறந்து போ நீ பறந்து போ
காதலில் கொஞ்ச நேரம் கலந்து போ
கரைந்து போ
ஆண் : பூக்கட்டும் உன் பாதம் சுற்றி
வண்ண வண்ண பூக்கள் மட்டும்
கேட்கட்டும் உன் காதில் காக்கை
குருவி குயில்கள் கிளிகள் கூட்டம்
சூழட்டும் காதல் சூழட்டும்
ஆண் : கூறட்டும் உன் குட்டி கதைகள்
மழலையில் குழந்தைகள்
ஊறட்டும் உனக்குள்ளே இயற்கையின் இயல்புகள்
தூறட்டும் காதல் ஊறட்டும்
முனங்கல் : ……………….
பெண் : பார்க்காத ஓர் புனித அன்பை
முதல் முறை பார்க்க வைத்தான்
காதல் அன்பு ரெண்டும் ஒன்று
என்று இன்று காட்டிவிட்டான்
சூழட்டும் காதல் சூழட்டும்
பெண் : ஹா கண்சிமிட்டும் நேரத்தில்
பல ஓவியங்கள் தீட்டிவிட்டான்
புரியாத பல கவிதைகளை
பேசி பேசி புரியவைத்தான்
ஊறட்டும் காதல் ஊறட்டும்
பெண் : சிறு உலகினில் உள்ள
ஒவ்வொன்றையும் ஒருங்கிணைத்தவன்
உன் முகம் மலர்வதை நான் உணர்வதை
செய்ய தெரிந்தவன்
இருவர் : பறக்கவே பிறக்கிறோம்
ஏனோ சுவர்களுக்குள் இருக்கிறோம்
நனையவே நினைக்கிறோம்
மழை வரும் நொடி அதை மறக்கிறோம்
மாறிடுவோம்
கர்நாடிக் முனங்கல் : ………………