பாடகர் : ஹரி சரண்
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா
முனங்கல் : ………………..
ஆண் : கைகள் இருந்தும்
கோர்க்கும் கரம் பொய்யாச்சு
கண்கள் இருந்தும்
பார்வை வலி ஆயாச்சு
எனைத் தொலைத்த தாய் அவளின்
ஏக்கம் எனை காட்டாதா
நடுங்கும் எந்தன் விரல்களையும்
தந்தை கரம் பூட்டாதா
ஆண் : கைகள் இருந்தும்
கோர்க்கும் கரம் பொய்யாச்சா
கண்கள் இருந்தும்
பார்வை வலி ஆயாச்சா
ஆண் : வேலை வருமே
நாளைத்தொடும் பூங்காற்றே
தேயும் நிலவே
வளரும் வரை நீ தேற்று
வான் இறங்கும் மா மழையும்
மேகம் உடைந்தால் தானே
கண் நெருங்கும் இன்பங்களும்
துன்பம் முடியும் போதே
ஆண் : வேலை வருமே
நாளைத்தொடும் பூங்காற்றே
தேயும் நிலவே
வளரும் வரை நீ தேற்று