பாடகர்கள் : ஷில்பா ராவ் மற்றும் ரவி ஜி
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர் : ஆதேஷ் கிருஷ்ணா

பெண் : மூச்சுக் காற்றில் பெயரேது
உனது எனதென்ற பிரிவேது
காற்றினால் நாம் சேர்வது கிடையாதா
சிதறி வீழும் விதைக் கூட
காலத்தால் பெரும் வனம் ஆகும்
சிறு செயல் பெரும் புயலாய் மாறாதா

பெண் : காற்றும் விதையும் எங்கும்
தன் பெருமை சொல்வதில்லை
கிளைகள் விரித்து நீ வாழு
உலகம் சிறியதில்லை

பெண் : உறவு எனும் எல்லை
இல்லையே அடக்க
மனிதமே போதும்
அன்பை வளர்க்க
உலகமெங்கும் இந்த
பாடல் ஒலிக்க
வரிகளாய் சேர்வோம்
தனிமை மறக்க

பெண் : மூச்சுக் காற்றில் பெயரேது
உனது எனதென்ற பிரிவேது
காற்றினால் நாம் சேர்வது கிடையாதா
ஹா..ஆஆ ஆஆஆ….

♪… பின்னணி இசை …

பெண் : இடரினை வேர் என
பார்த்தது போதுமே
இயற்கையின் பாடங்கள்
உன்னில் வேர் ஊன்றுமே

பெண் : கேட்க்கும் முன்பே நீட்டும் கைகள்
கூடவே வேண்டும்
வீழும் முன்பே மீட்க்கும் எண்ணம்
இயல்பிலே போதும்

பெண் : உறவு எனும் எல்லை
இல்லையே அடக்க
மனிதமே போதும்
அன்பை வளர்க்க
உலகமெங்கும் இந்த
பாடல் ஒலிக்க ஹா ஆஹா….
வரிகளாய் சேர்வோம்
தனிமை மறக்க

பெண் : மூச்சுக் காற்றில் பெயரேது
உனது எனதென்ற பிரிவேது
காற்றினால் நாம் சேர்வது கிடையாதா
ஹா..ஆஆ ஆஆஆ….

ஆண் : கர்னாட்டிக் இசை ……………

WhatsApp Facebook Twitter