Chinna Chinna Seithi Solli Lyrics in Tamil

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : வாலி

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

ஆண் : சின்ன சின்ன சேதி சொல்லி

வந்ததொரு ஜாதி மல்லி

ஆனமல காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்

ஆசை மனம் பாடுதொரு தேவாரம்

 

ஆண் : மேக்கால வெயில் சாய

வாய்க்காலில் வெள்ளம் பாய

மயக்கம் ஒரு கெறக்கம்

இந்த வயசுல மனசுல

வந்து வந்து பொறக்கும்

 

பெண் : சின்ன சின்ன சேதி சொல்லி

வந்ததொரு ஜாதி மல்லி

ஆனமல காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்

ஆசை மனம் பாடுதொரு தேவாரம்

 

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

 

ஆண் : மெல்ல மெல்ல தாளம் தட்ட

மத்தளமும் சம்மதத்த தருமோ

கச்சேரிய நானும் வைக்கும் நாள் வருமோ

 

பெண் : அஞ்சு விரல் கோலம் போட

அச்சம் என்ன மிச்சமின்றி விடுமோ

அன்னாடம்தான் ஆசை என்னும் நோய் வருமோ

 

ஆண் : மொட்டு விரிந்தால் வண்டுதான்

முத்தம் போடாதா

பெண் : முத்தம் விழுந்தால் அம்மம்மா

வெட்கம் கூடாதா

ஆண் : கட்டி புடிச்சிருக்க

மெட்டு படிச்சிருக்க

எனக்கொரு வரம் கொடு

மடியினில் இடம் கொடு

 

பெண் : சின்ன சின்ன சேதி சொல்லி

வந்ததொரு ஜாதி மல்லி

ஆனமல காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்

ஆசை மனம் பாடுதொரு தேவாரம்

 

♫ ♪… பின்னணி இசை …♫ ♪

 

பெண் : உன்ன விட்டு நான் இருந்தால்

அந்தி வரும் சந்திரனும் சுடுமோ

மன்மதனின் அம்புகளும் பாய்ந்திடுமோ

 

ஆண் : வெண்ணிலவ தூது விடு

வண்ண மயில் உன் அருகில் வருவேன்

பள்ளியறை பாடல்களை பாடிடுவேன்

 

பெண் : என்னை கொடுப்பேன் கொண்டு போ

உந்தன் கையோடு

ஆண் : ஒட்டி இருப்பேன் ஆடை போல்

உந்தன் மெய்யோடு

 

பெண் : தன்னந்தனிச்சிருக்க

உன்னை நினைச்சிருக்க

பனி விழும் இரவினில்

உதடுகள் வெடிக்கிது

 

ஆண் : சின்ன சின்ன சேதி சொல்லி

வந்ததொரு ஜாதி மல்லி

ஆனமல காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்

ஆசை மனம் பாடுதொரு தேவாரம்

 

பெண் : மேக்கால வெயில் சாய

வாய்க்காலில் வெள்ளம் பாய

ஆண் : மயக்கம் ஒரு கெறக்கம்

இந்த வயசுல மனசுல

வந்து வந்து பொறக்கும்

 

பெண் : சின்ன சின்ன சேதி சொல்லி

வந்ததொரு ஜாதி மல்லி

ஆனமல காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்

ஆசை மனம் பாடுதொரு தேவாரம்

WhatsApp Facebook Twitter