பாடகர்கள் : எஸ். ஜானகி & மனோ
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : கஸ்தூரி ராஜா
பெண்: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா
பெண்: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா
பெண்: தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா
பெண்: அந்த இந்திரன் சந்திரனும்
மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும்
மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடடும்
நான் காத்தாகி ஊத்தாகி
மாமன தழுவி கட்டிக்கணும்
ஆண்: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
நானும் கூட பேச போறேன் மணிக்கணக்கா
தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
ஆண்: நாள் தோறும் காத்திருந்தேன், நானே தவமிருந்தேன்
உனக்காக தான், கண்ணே உனக்காக தான்
பெண்: நான் கூட மனசுக்குள், ஆசை வளத்துகிட்டேன்
உன்னை பார்க்கத்தான், மாமா உன்னை பார்க்கத்தான்
ஆண்: அட முத்துன கிறுக்கு மொத்தமும் தெளிய முறையிடலமோ
பெண்: சுத்துற கண்ணுல சிக்குன என்னை சிறையிடலாமோ
ஆண்: எத்தனை நாள் இப்படி நான் ஏங்கிறது
பெண்: பொட்டு வைச்சு பூ முடிக்கும் நாளிருக்கு
பெண்:தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா
ஆண்: தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
ஆண்: ஊர் தூங்கும் வேலையிலும், நான் தூங்க போனதில்லை
உன்னால தான், கண்ணே உன்னால தான்
பெண்: யார் பேச்சு கேட்டாலும் என் காதில் கேட்பதெல்லாம்
உன் பேரு தான், நித்தம் உன் பேரு தான்
ஆண்: இத்தனை நனப்பு என் மேலே இருந்தும் எட்டி போகலாமோ
பெண்: கட்டுப்பாடு இருந்தும் கட்டிக்கும் முன்னே முட்டிகொள்ளலாமோ
ஆண்: முத்தமிட்டால் மோசம் என்ன உண்டாகும்
பெண்: சத்தமிட்டால் உன் நிலமை என்னாகும்
பெண்: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா
ஆண் : தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா
பெண்: அந்த இந்திரன் சந்திரனும்
மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்
ஆண்: அந்த ரம்பையும் ஊர்வசியும்
மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடடும்
பெண் : நான் காத்தாகி ஊத்தாகி
மாமனே தழுவி கட்டிக்கணும்
ஆண்: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
நானும் கூட பேச போறேன் மணிக்கணக்கா
பெண்: தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா