பாடகர்கள் : சத்யன் மற்றும் சுகந்தி
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடல் ஆசிரியர் : ஜெயஸ்ரீ மதிமாறன்
பெண் : கை வளவி குலுங்க தட்டுங்க
ஆலேலங்கும்மி ஆத்தாளுக்கு ஆடி தட்டுங்க
வட்டமிட்டு வளைஞ்சு தட்டுங்க
ஆலேலங்கும்மி அம்மனுக்கு பாடி தட்டுங்க
ஆண் : காத்தாடும் கரையோரம் காத்திருக்கும் காளியே
கடல் சூழ்ந்த எங்க மாரியே
தாழம்பூ கொண்டக்காரியே
உன் மனசிறங்கி எங்க குறை
தீர்க்க வேணுமே
இருவர் : கை வளவி குலுங்க தட்டுங்க
ஆலேலங்கும்மி ஆத்தாளுக்கு ஆடி தட்டுங்க
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
முனங்கல் : …………….
பெண் : வட்டப் பொட்டுக்காரி
மரிக்கொழுந்து வாசக்காரி
அடங்கா கோவக்காரி
குணத்துல தான் ஆசக்காரி
குடிய செழிக்க வைப்பாளே
என் குலத்த தழைக்க வைப்பாளே
ஆண் : நல்ல தலைவாழை இலை விரிச்சி
வகைவகையா படைப்போம்
அட கங்காணமும் காப்பும் கட்டி
கும்மி போட்டு களிப்போம்
அட உடுக்கையோட பம்ப சத்தம் கேட்டு இறங்குவா
அவ சப்பரத்தில் ஒய்யாரமா பவனி காணுவா
பெண் : கடல் காக்கும் காளியே
வென தீர்க்கும் மாரியே
உன் பாதத்துல இறக்கி வச்சோம்
எங்க பாரத்த
வென தீர்த்து வச்சி பாத்துக்கடி
இந்தக் கூட்டத்த
பெண் : தன்னே நன்னே தானே தந்தானே
தன்னே நன்னே தானே நன்னே தந்தானே
தன்னே நன்னே தானே தந்தானே
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
பெண் : வானம் இடி முழங்க மாரி மழை
மண் நனைக்க
உப்பு காத்து அடிக்க வந்த எல்லா காத்து நிக்க
பூமி செழிக்க வேணுமே
என் சனமும் சிறக்க வேணுமே
ஆண் : அந்த கருங்கடலும் செங்கடலும்
ஆளுகின்ற ஆத்தா
அவ பக்குவமா பக்கம் நின்னு
எங்க ஊர காப்பா
வா அக்காமாரே தங்கமாரே
குலவை போடுங்க
முளைப்பாரியிட்டு அம்மனுக்கு
அரளி சாத்துங்க
பெண் : மாசு ஏது கும்மியடி
மேலா பாக்க கும்மியடி
அந்த மஞ்சக்கரம் மணக்க மணக்க
குலைஞ்சு கும்மியடி
எங்க குத்தங்குறை போக்க வேண்டி
குனிஞ்சு கும்மியடி
ஆண் : தன்னே நன்னே தானே தந்தானே
தன்னே நன்னே தானே நன்னே தந்தானே
தன்னே நன்னே தானே தந்தானே