பாடகர் : சிலம்பரசன் டி.ஆர்

இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்

பாடல் ஆசிரியர் : கோ சேஷா

ஆண் : ஒரு நொடியில் காதல் நெஞ்சை
உடைத்தாயடி
அழகான ஓவியத்தை கிழித்தாயடி
சிரிப்புக்குள் காயம் வைத்து
சிதைத்தாயடி
விதை போட்ட கையில் வேரை
சாய்த்தாயடி

ஆண் : சேர்ந்து கண்ட கனவுகள் பிழையா
சொன்ன வார்த்தை மொத்தமும் பொய்யா
கண்ணீர் இங்கு சிந்தி கொண்டே கேள்வி கேட்க்கிறேன்

ஆண் : சாகும் வரையில் கூடவே இருப்பேன்
என்று செய்த சத்தியமெல்லாம்
வெறும் வார்த்தையா
நீ போட்டது பகல் வேசமா

ஆண் : ஏன்டி விட்டு போன
உன் இதயம் கல்லா என்ன
ஏன்டி விட்டு போன
நிஜமா புரியலடி
ஏன்டி விட்டு போன
நான் தனியா இங்க சாக
ஏன்டி விட்டு போன
அய்யோ வலிக்குதடி

BGM…

ஆண் : உன்னை ரசிச்ச
எனக்கிது வேணும்
உன்னை நேசிச்ச
எனக்கிது வேணும்
உன்னை நம்பி நான் கிடந்தேனே
எனக்கு இன்னும் வேணும்டி

ஆண் : தீயில் விழும் ஈசலை போல
உன் விழியில் விழுந்தவன் நானோ
உயிர் மொத்தமும் வெந்து தணிந்து
காந்தலாச்சுடி
உன்னை பிரிந்தால் அந்த உலகம்
சுழலாதடி
தன்னந்தனியாய் இனிமேல் நானும்
உலகினில் வாழ்ந்து என்னடி

ஆண் : எந்தன் ஆகாயத்தின்
நிலவே நீதானடி
உன்னை நான் தேடி நான் தேடி
என் ஆயுள் தீரட்டும்டி

ஆண் : ஏன்டி விட்டு போன
உன் இதயம் கல்லா என்ன
ஏன்டி விட்டு போன
நிஜமா புரியலடி
ஏன்டி விட்டு போன
நான் தனியா இங்க சாக
ஏன்டி விட்டு போன
அய்யோ வலிக்குதடி

BGM…

ஆண் : ஏன்டி ஏன்டி ஏன்டி
விட்டு போன நீ
என் நெஞ்ச மண்ணுல நீயும்
குழி தோண்டி பொதச்சுட்டடி
ஏன்டி ஏன்டி ஏன்டி
விட்டு போன நீ
உயிர் இருந்தும் பொணத்த போல
உன்னால மாறிட்டேன்டி

WhatsApp Facebook Twitter