பாடகர் : யுவன் சங்கர் ராஜா
இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்
பாடலாசிரியர் : கோ சேஷா
ஆண் : அரக்கர்கள் வானில் இருந்து
இறங்குவதில்லை
மனிதன் தான் தீமை செய்து அரக்கன் ஆகிறான்
இதயத்தில் தர்மம் என்றும்
உறங்குவதில்லை
இதை உணர்பவன் தானே
மீண்டும் மனிதன் ஆகிறான்
ஆண் : இங்கு எதை தேடி வந்தோம் இன்று
எது வாக ஆனோம் இன்று
அறியாதவன் மிருகம் ஆகிறான்
ஆண் : நான் யார் இறைவா
விடை தா இறைவா
நான் யார் இறைவா
பதில் சொல்ல மண்ணில் வருவாயா
ஆண் : நான் யார் இறைவா
விடை தா இறைவா
நான் யார் இறைவா
விடையாக எனக்குள் வருவாயா
BGM..
ஆண் : இங்கு பிறர் சிந்தும் கண்ணீர்
மழையில் குளிர் காய வேண்டும் என்று
நினைகின்றவன் அரக்கன் ஆகிறான்
ஆண் : நான் பிறர் கண்ட கனவை கொன்று
உயிர் வாழ்வது சரியா என்று
கேள்வி கேட்பவன் மனிதன் ஆகிறான்
ஆண் : நான் யார் இறைவா
விடை தா இறைவா
நான் யார் இறைவா
பதில் சொல்ல மண்ணில் வருவாயா
ஆண் : நான் யார் இறைவா
விடை தா இறைவா
நான் யார் இறைவா
விடையாக எனக்குள் வருவாயா
BGM….