பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் சஞ்சனா கல்மஞ்சே
இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்
பாடல் ஆசிரியர் : விக்னேஷ் சிவன் மற்றும் கோ சேஷா
ஆண் : வானம் பார்த்து கிடந்தேனே
மழையாய் வந்து விழுந்தாயே
வழி துணையே….
வழி துணையே…நீயே
BGM…..
ஆண் : கண்டேன் கண்டேன் என்னுடையவளை
தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை
பெண் : கண்டேன் கண்டேன் என்னுடையவனை
தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை
ஆண் : உற்று உன்னை பார்கையிலே
தோற்று கிடைத்த தனிமையினை
கற்று தந்த காதல் வலி
விட்டு போனதே
ஆண் : ஊர்கூடும் நல்ல நல்ல தடங்கல்லெல்லாம்
உன்னை கூட்டிக்கொண்டு கைக்கோர்த்து கொண்டு
இதழ் சேர்த்துவைக்க நல்ல இடங்கள் எல்லாம்
வா தேடி தேடி போவோம்
பெண் : இதழ் சேர்ந்திருக்கும் அந்த நேரத்திலே
விழி மூடி நீயிருக்கும் வேலையிலே
என்னென்ன வரம் வேண்டும் என்பதையே
நான் வேண்டி வேண்டி கேட்பேன்
ஆண் : வானம் பார்த்து கிடந்தேனே
மழையாய் வந்து விழுந்தாயே
வழி துணையே….
வழி துணையே…
ஆண் : வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம்
வா வா ஓடி திருவோம் வா
என் துணையே .. வழி துணையே ..
நீயே
BGM
ஆண் : கண்டேன் கண்டேன் என்னுடையவளை
தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை
BGM
பெண் : இந்த நேரம் இனிப்பது போல
எப்போதும் இருப்பாயா?
உச்சபட்ச ஆசை கொண்டேனே உன்னிடத்தினிலே..
ஆண் : வெட்பம் குளிர் எது வந்தாலும்
இதமாக இணைப்பாயா
திக்கு முக்கு ஆடிப்போகின்றேன்…
பெண் : நீர்வீழ்ச்சி நெற்றியின் மீது
நிற்க்காமல் பொழிவது போல
உன் முத்தம் கொட்டிட வேண்டும்
புருவம் துடங்கி நுனிபாதம் வரை
இருவரும் : எங்கேயோ பிறந்த என் அன்பே
எனைத் தேடி வந்ததே போதும்
இனி வாழும் அத்தனை நாளும்
மினுக்கும் மினு மினுக்குமே
ஆண் : வானம் பார்த்து கிடந்தேனே
மழையாய் வந்து விழுந்தாயே
வழி துணையே….
வழி துணையே…
ஆண் : வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம்
வா வா ஓடி திருவோம் வா
என் துணையே .. வழி துணையே ..
நீயே
இருவரும் : கர்நாடிக் முனங்கல் ….